அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 23.09.2017.

யாக்கோபு தின தியானம்

“உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு.”

வேதப்பகுதி: யாக்கோபு 2:18

தொடர்ச்சியாக விடப்படும் சவால்

விசுவாசத்தை கிரியைகளில் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று வாதிடுவோர் சிலர் இருந்தார்கள் என்று யாக்கோபு அறிந்திருந்தார். இதற்கு அவர் ஒரு பதிலை வைத்திருந்தார்.

ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக்காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.
யாக்கோபு 2:18

1. “ஆனால் ஒருசிலர் சொல்லுவார்கள்”

அ) “உண்மையான விசுவாசம்” என்பது என்ன என்பதைப் பற்றிய போதனையை ஏற்றுக்கொள்ளாத சிலரை யாக்கோபு நன்கு அறிந்திருந்தார்.

a) “உண்மையான விசுவாசம்” இயற்கையாகவே கிரியைகளில் வெளிப்படும் என்று யாக்கோபு வாதிட்டார்.

b) கிரியை இல்லாத விசுவாசம் “செத்த விசுவாசமே” தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தெளிவாக அறிவித்தார்.

ஆ) இந்த சத்தியத்தை ஒத்துக்கொள்ளாதவர்களின் வாதம் இப்படித்தான் இருக்கிறது.

a) விசுவாசம் என்பது “எண்ணம் மாத்திரமே”, அதை கிரியைகளில் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

b) கிரியைகள் வெறும் கற்பனை மாத்திரமே. யாக்கோபு வாதிடுதுபோல், விசுவாசத்திற்கும் கிரியைக்கும் எந்த சம்பந்தமும்மில்லை.

2. “கிரியையில்லாமல் உங்கள் விசுவாசத்தை எனக்குக் காட்டுங்கள்”

அ) அப்படிப்பட்டவர்களை யாக்கோபு கிரியையில்லாமல் தங்கள் விசுவாசத்தை “காட்டும்படி” கேட்கிறார்.

ஆ) “காட்டு” என்ற சொல் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

a) நிரூபித்தல்,

b) வெளிப்படுத்துதல்.

இ) இந்த நிலையை கொண்டிருக்கும் நபர் தனது கருத்தை நிருபிக்க கடுமையான வலிமையான சான்றுடன் வரவேண்டும். அது வேதத்தின்படி இருக்கவேண்டும்.

ஈ) இப்படிப்பட்ட வாதத்தை அவர்களால் நிரூபிக்கமுடியாது என்று யாக்கோபு நன்றாக அறிந்திருந்தார்.

3. ” நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் “

அ) யாக்கோபு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காத காலம் ஒன்று இருந்தது.

ஆ) அந்த காலத்தில் அவர் சந்தேகம் கொண்டவராகவும் ஆண்டவரை விமர்சிக்கிறவராகவும் இருந்தார் (யோவான் 7: 3-5).

இ) பிறகு யாக்கோபு கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டார்.

ஈ) அவர் “உண்மையான விசுவாசத்தின்” ஒரு விளக்கத்தை மட்டுமல்ல, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் அதற்கான ஆதாரத்தையும் கொடுக்கத் தயாராக இருந்தார்.

a) அவர் திருச்சபைக்காக குறிப்படதக்க பங்களிப்பை கொடுத்தார் (அப்போஸ்தலர் 15: 13-21).

b) யாக்கோபு தேவனுடைய வார்த்தையை போதிக்கும் ஒரு ஆசிரியராகவும் புதிய ஏற்பாட்டிற்காக தனது பங்கை (யாக்கோபு நிருபம்) அளிப்பவராகவும் மாறி இருந்தார்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *