அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 21.09.2017.

யாக்கோபு தின தியானம்

“என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும்…”

வேதப்பகுதி: யாக்கோபு 2:14

உண்மையான விசுவாசம்

ஒருவருடைய விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் யாக்கோபு இந்த சிரமத்திற்காக தயங்கவில்லை.

என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? யாக்கோபு 2:14

1. “என் சகோதரரே, பிரயோஜனமென்ன”

அ) யாக்கோபு இந்த விவகாரத்தை நட்பு ரீதியிலேயே அணுகுகிறார்.

ஆ) அவர் தனது வாசகர்களை “என் சகோதரர்கள்” என்று அழைக்கிறார்.

இ) இங்கு அவர் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்புகிறார்- “உங்களுக்கு பிரயோஜனம் என்ன?”

2. “விசுவாசம் உண்டென்று” என்று சொல்லுவது

அ) ஒருவர் விசுவாசம் இருப்பதாக வாய்மொழியாக சொல்லலாம்.

ஆ) இன்னொருவர் தனக்கு விசுவாசம் இருப்பதாக உணருவதை குறித்து பேசலாம்.

இ) மூன்றாவதாக ஒருவர் தனக்கு இருக்கும் விசுவாசத்தை குறித்த நிச்சயத்தை உடையவராக பேசலாம்.

ஈ) நாங்காவதாக தனக்கு விசுவாசத்தின் அனுபவம் இருப்பதாக கூட சொல்லலாம்.

இதுபோன்ற கூற்றுகளுக்கு வரையரை கிடையாது இதனோடே மேலும் பலவற்றை சேர்க்கலாம்!

3. “ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் “

அ) இது நிபந்தனையுள்ள வாக்கியம்.

ஆ) இது இரண்டு பாகங்களை கொண்ட வாக்கியம்.
ஒருவர் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லுகிறார்.

ஆனால் அவருடைய வாழ்க்கை விசுவாசத்தின் கிரியையை வெளிப்படுத்தவில்லை.

இ) இந்த நிபந்தனை வாக்கியம் உண்மையான விசுவாசத்தை உடையவராக கூறிக்கொள்ளும் நபரைப் பற்றி தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது.

4. அந்த விசுவாசம் அவரை இரட்சிக்குமா?

அ) யாக்கோபு “விசுவாசம்” இருக்கின்றதா எனக் கேட்கவில்லை.

ஆ) உண்மையான விசுவாசத்திலிருந்து வெளிப்படும் எந்த கிரியையும் இல்லாத நபரின் விசுவாசத்தைத்தான் அவர் கேள்விக்குட்படுத்துகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனை:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்ததை நினைவுகொள்வோம். மத்தேயு கவனமாக இந்த போதனை பதிவு செய்திருக்கிறார். விசுவாசம் உண்டென்று வார்த்தையில் சொல்லுவதினல் மாத்திரம் ஒருவர் தானாக பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க தகுதியானவராக்கி விடாது.

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. மத்தேயு 7:21

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *