அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 24.08.2017

யாக்கோபு தின தியானம்

தேவனுடைய ஊழியக்காரனாகிய யாக்கோபு …”

வேதப்பகுதி : யாக்கோபு 1: 1

நாம் நம்மை எவ்வாறு காண்கிறோம்?

நம் ஒவ்வொருவருக்கும் “நம்மை” நாமே காண்கிற விதம் என்று ஒன்று உள்ளது. நாம் எவ்வாறு நம்மை காண்கிறோமோ அப்படித்தான் நம்மை குறித்த மதிப்பீட்டை வைத்திருப்போம். நாம் நம்மை அறிமுகம் செய்யும்போது நாம் யார் என்றும் நமது தகுதி என்ன என்றும் காட்டிக்கொள்ளவே விரும்புகின்றோம். ஒருவர் சொல்லுவதை மற்றவர் கேட்க வேண்டும் எனில் அவர் தன்னைப் பற்றி ஒரு தெளிவுடன் இருக்கவேண்டும் என்று உலகம் நினைக்கின்றது.

யாக்கோபு தன்னை எப்படி காண்கிறவராக இருந்தார்?

யாக்கோபு தன்னை யார் என்று அடையாளம் காட்ட விரும்புவது சுவாரசியமாக இருக்கின்றது. அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய ஆழமான பாடங்கள் இங்கு இருக்கின்றது.

தேவனுக்கும்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு.” யாக்கோபு 1: 1

1. ” யாக்கோபு “

அ) இவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சகோதரன்.

# இது ஒரு மிகப் பெரிய சிலாக்கியம்.

# ஆனால் யாக்கோபு இதைப் பற்றி ஒரு பெருமை கொள்ளவில்லை.

ஆ) அவர் எருசலேமில் இருந்த சபையில் மிகவும் மதிப்பு மிக்கவராக இருந்தார்.

# அப்போஸ்தலனாகிய பவுல் அவர்கள் அவரை “அப்போஸ்தலன்” என்று அழைத்தார் (கலாத்தியர் 1:19).

# “கர்த்தருடைய சகோதரன்” என்று பவுல் ஒப்புக்கொள்கிறார் (கலாத்தியர் 1:19).

# யாக்கோபும், கேபாவும், யோவானும் சபையின் “தூண்களாக” எண்ணப்பட்டனர் (கலாத்தியர் 2: 9).

இ) யாக்கோபு சாதாரணமாக தனது பெயரை வைத்துத்தான் தன்னை அறிமுகப்படுத்துகிறார்.

2. “தேவனுடைய ஊழியக்காரன்”

அ) யாக்கோபு இங்கே மனத்தாழ்மையை வெளிப்படுத்தினார்.

ஆ) தம்மை தாழ்மையுடன் “தேவனுடைய வேலைக்காரன்” என்று சொல்லுகின்றார்.

3. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்

அ) இயேசுவை “கர்த்தர்” என்று யாக்கோபு ஏற்றுக்கொள்ளாத ஒரு காலம் இருந்தது (யோவான் 7: 5).

# அவரும் அவருடைய சகோதரர்களும் இயேசுவை உலகிற்கு வெளிப்படையாக காட்டும்படி சவால் செய்தனர் (யோவான் 7: 3-4).

# அந்த நேரங்களில் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கவில்லை.

ஆ) தம்மைத் தாமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடிமையாகக் கருதினார்.

#இது அவரது விசுவாசத்திலும் அவருடைய வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

# யாக்கோபு எந்த விதத்திலும் தன்னையே உயர்த்த விரும்பவில்லை.

# அவர் தன்னை வெறும் “ஒரு அடிமையானவனாகவே” எண்ணினார்.

4. அவரது வாழ்க்கையின் இலக்கு

அ) தேவனும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும்.

ஆ) அவர் தேவனுக்காக பணி செய்யும்படி தன்னை வேலைக்காரனாக ஒப்புக்கொடுத்திருந்தார்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *