அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 20.09.2017.

யாக்கோபு தின தியானம்

“நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் ஜெயம்பெறும்”

வேதப்பகுதி: யாக்கோபு 2:13

எப்படியாவது பிரமாணத்தில் ஒரு ஓட்டையை கண்டுபிடித்து தீர்ப்புக்கு தப்பித்துவிட முடியும் என்று நினைத்தவர்களின் எண்ணத்தை யாக்கோவு இங்கு விவரிக்கின்றார். இவர்கள் ஒருவேளை மற்றவர்களை விட தங்களை நீதிமான்கள் என்று நினைத்து மற்றவர்களை நியாயந்தீர்க்கும் உரிமை இருப்பதாக நம்பியவர்களாக இருந்திருக்கலாம்.

வெளியேறும் வழி

இப்படிபட்ட இக்கட்டான நிலையில் இருந்து வெளியேறும் ஒரு வழியை யாக்கோபு இங்கு முன்வைக்கிறார். அவரது திட்டத்தை பின்வரும் வேதப்பகுதியில் காணலாம்.

சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். யாக்கோபு 2: 12-13

1. “சுயாதீனப்பிரமாணம்”

அ) இது தேவனுடைய பிரமாணத்தை பற்றிய மற்றொரு விளக்கம் ஆகும்.

ஆ) அதில் “விடுதலை” உள்ளது!

2. இரக்கம் காட்டாதவருக்கு நியாயத்தீர்ப்பில் இரக்கம் காட்டப்படுவதில்லை.

அ) இரக்கம் செய்யாதவருக்கு பிரமாணத்தினால் காட்டப்படும் நடைமுறை இது.

ஆ) அப்படிப் பார்க்கும்பொழுது அனைவருமே பிரமாணத்தை மீறுபவராகின்றோம்.

இ) சில வேளைகளில் ஒன்று அல்லது பல பிரமாணங்கள் மீறப்பட்டிருக்கும்.

3. “தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் வெற்றிபெறும்”

அ) தேவன் இஸ்ரவேலரை பலமுறை மன்னித்த விதமும் இப்படித்தான்.

a) இஸ்ரவேல் தேவனுடைய பிரமாணத்தால் இரக்கமின்றி நியாயந்தீர்க்கப்பட்டிருந்தால், அந்த தேசம் அழிந்துபோயிருக்கும்.

b) ஆனால் தேவனுடைய இரக்கத்தின் காரணமாகத்தான் இஸ்ரவேல் மீண்டும் மற்றும் மீண்டும் விடுவிக்கப்பட்டிருந்தது.

ஆ) எனவே, “தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் வெற்றிபெறும் ” என்று சொல்வது சரியானது.

a) இரக்கத்தினால்தான், தேவன் மன்னிப்பு வழங்குகிறார்.

b) இரக்கம் இருந்தால்தான், ஒருவர் எவ்வளவு கொடிய பாவம் செய்திருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மன்னிக்க முடியும்.

4. “அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்”

அ) நாம் தேவன்மீது எந்த விசுவாசத்தை கொண்டிருக்கின்றோம் என்று சொல்லுகிறோமோ அதை செய்வதுதான் சவால்.

ஆ) கர்த்தரை பற்றி நாம் எதை நம்புகிறோம்?

a) அவர் இரக்கமும் கருணையும் உடையவர் என்பதை…

b) அவரை நேசிக்கும் ஏழைகளுக்கு அவருடைய பிரமாணத்தில் இரக்கம் காட்டுகிறார்…

இ) நாமும் இரக்கம் காட்ட வேண்டும் என்று பிரமாணம் சொல்லுகிறது.

ஈ) யாரிடத்திலும் பாரபட்சமாக நடந்துகொள்ள கூடாது.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *