அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 18.09.2017.

யாக்கோபு தின தியானம்

ராஜரீக பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.

வேதப்பகுதி: யாக்கோபு 2:8

பரிசுத்த வேதாகமம்

உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள். எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். யாக்கோபு 2:8-10.

1. “ராஜரீக பிரமாணம்”

அ) தேவனுடைய பிரமாணங்கள் “ராஜரீக பிரமாணம்” என்று அழைக்கப்படுகிறது,

ஆ) யாக்கோபு தேவனுடைய வார்த்தையை ராஜாவின் வார்த்தையாக கண்டதினால் அதை ராஜரீக பிரமாணம் என்று அழைக்கிறார்.

2. நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்

அ) ராஜரீக பிரமாணத்திற்கு ராஜாவின் அதிகாரம் இருக்கிறது,

ஆ) முழு பிரமாணமும் கடைபிடிக்கப்படவேண்டும்.

3. தேவனுடைய பிரமாணத்தை மீறுவது

அ) இங்கு உலக பிரமாணத்தை குறிப்பிடவில்லை,

ஆ) இது ராஜாவின் (தேவனாகிய கர்த்தரின்) பிரமாணத்தை குறிப்பிடுகிறது.

4. ராஜரீக பிரமாணம்

அ) உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக,

ஆ) இது கீழ்ப்படிதலோடு நிறைவேற்றப்பட வேண்டும்.

இ) இந்த ராஜரீக பிரமாணத்திற்கு கீழ்ப்படியும் ஒருவர்தான் பாரட்டப்படுகிறார்.

5. ராஜரீக பிரமாணத்திற்கு கீழ்படியாமை

அ) பட்சபாதத்தோடு இருப்பது ராஜரீக பிரமாணத்தின்படி பாவம்,

a) ஏனென்றால் ஏழ்மையான ஒரு சகோதரன் கனவீனப்படுத்தப்படுகிறான்

b) அவனுக்கு அன்பு காட்டப்படவேண்டும் ஆனால் அவன் அசட்டை செய்யப்படுகிறான்

ஆ) ராஜரீக பிரமாணத்தை செய்யத் தவறும் எவனும் மீறுகிறவனாகிறான்.

இ) தேவனுடைய பிரமாணத்தை மீறும் குற்றம்.

a) ஒருவேளை அவன் மற்ற அனேக சட்டதிட்டங்களை கைக்கொண்டாலும்,

b) பட்சபாதம் பண்ணுகிறவனாக இருந்தால் கர்த்தர் முன்பாக அவன் குற்றவாளியே.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *