அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 17.09.2017.

யாக்கோபு தின தியானம்

“நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள்.”

வேதப்பகுதி: யாக்கோபு 2: 6.

தரித்திரரை கனம்பண்ணுதல்

ஏழ்மையாக இருந்தாலும்கூட அவர்கள் தேவனிடத்தில் அன்புகூறுகிறவராக இருந்தால் அவர்களை அவர் கணம் பண்ணுகிறார் என்று தன்னுடைய வாசகர்களுக்கு யாக்கோபு நினைவுபடுத்தி எழுதுகிறார். தேவன் ஒருபோதும் வெளித்தோற்றத்தை வைத்து நிதானிக்கிறவர் அல்ல. அவர் இருதயத்தை பார்க்கின்றவர்.

ஏழைகளை கனவீனப்படுத்துதல்

ஆனால் ஏழைகள் அவர்களுக்கு இருக்கும் தரித்திரத்தினால் அசட்டை செய்யப்படுவது
துரதிஷ்டவசமானது. யாக்கோபு இந்த பாவத்தை இங்கு வெளிப்படையாக விவரிக்கின்றார்.

நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்? உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்? யாக்கோபு 2:6-7.

1. “நீங்களோ தரித்திரரை கனவீனம்பண்ணுகிறீர்கள்”

அ) ஏழை மனிதன் கனவீனப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.

ஆ) அவர்கள் அப்படி நடத்தப்படுவது மிகவும் கொடுமையானது.

2. ஐஸ்வரியவானின் செயல்களை குறித்த கடுமையான நினைவூட்டல்

அ) ஐஸ்வரியவான்கள் உங்களை ஒடுக்குகிறார்கள் அல்லவா?

a) அவிசுவாசிகளைத்தான் இந்த இடத்தில் ஐஸ்வரியவான்கள் என்று குறீப்பிடுகிறார்.

b) இவர்கள் ஏழைகளை கையாளுவதில் மோசமாக நடத்துகிறவர்களாக இருந்தார்கள்.

c) இவர்கள் ஏழைகளை ஒடுக்குகிறவர்களாக இருந்தார்கள்.

ஆ) உங்களை நியாசனத்திற்கு முன்பாக இழுக்கிறார்கள் அல்லவா?

a) ஐஸ்வரியவன்கள் நியாசனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.

b) லஞ்சத்தினால் நியாயாதிபதிகளை விலைக்கு வாங்கி ஏழைகளுக்கு எதிராக தீர்ப்பு சொல்ல வைத்தார்கள்.

c) ஏழைகள், ஐஸ்வரியவான்களுக்கு எதிராக தங்களை காத்துக்கொள்ள பெரிதாக வழி ஒன்றும் இல்லாதிருந்தார்கள்.

இ) உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்?

c) ஐஸ்வரியவான்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது எந்த மதிப்பும் வைக்கவில்லை.

b) அவருடைய நாமத்தை எளிதாக அவமதிக்கிறவர்களாக இருந்தார்கள்.

c) எந்த குறையும் இல்லாதபோதும்கூட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தூஷித்தார்கள்.

ஐஸ்வரியவான்களை கனம்பண்ணுவது எவ்விதத்திலும் தகுதியானது இல்லை

அவர்கள் செல்வந்தர்களாக இருப்பதினால் கனம்பண்ணப்படவேண்டும் என்று எண்ணுவதை யாக்கோபு அர்த்தமற்றதாக கருதுகிறார். ஒருவரை கனம்பண்ணுவதற்கு அவருடைய செல்வம் ஒருபோதும் அளவுகோளாக இருக்கவேண்டியதில்லை. அதிலும் முக்கியமாக அவர்கள் கர்த்தரை அறியாமல் அவருடைய நாமத்தை தூஷித்துகொண்டிருப்பவர்கள் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

கனத்திற்கு பாத்திரவான்கள் யார்
விசுவாசமுள்ளவர்களைத்தான் கர்த்தர் கனம்பண்ணுகிறார் (எபிரேயர் 11:6) என்று வேதம் நமக்கு போதிக்கின்றது. அவரிடத்தில் அன்பு கூறுகிறவர்களை கர்த்தர் கனம்பண்னூகிறார் (யாக்கோபு 2:5) என்றும் கற்றுகொண்டோம். கர்த்தர் யாரை கனம்பண்ணுகிறார் என்பதை கவனமாக கற்றுக்கொள்வோம்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *