
“தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக…தெரிந்துகொள்ளவில்லையா?”
வேதப்பகுதி: யாக்கோபு 2:5
வேதாகம ஆலோசனை
யாக்கோபு எச்சரிப்பான வார்த்தைகளை மாத்திரம் கொடுக்கவில்லை. பட்சபாதம் என்னும் பாவத்தை சரிசெய்ய வேதாகம வழியான ஆலோசனையையும் கொடுக்கின்றார்.
என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? யாக்கோபு 2:5
1. என் பிரியமான சகோதரர்களே கேளுங்கள்.
அ) அனேக கண்டிப்பான வார்த்தைகள் கொடுக்கப்படுகின்றது,
ஆ) ஆனால் அவையாவும் சகோதர அன்போடு செய்யப்பட்டது.
இ) “கேட்கும்படி” இங்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
2. தேவன் தரித்திரரை தெரிந்துகொள்ளவில்லையா?
அ) பொதுவாக ஏழைகள் இந்த உலகத்தில் அசட்டை செய்யப்படுகிறார்கள்.
ஆ) ஆனால் தேவன் அவர்களை தம்முடைய சர்வ அதிகாரத்தோடு அவர்களைத் தெரிந்துகொள்கிறார்.
- மேசியா பிறந்த செய்தி ஏழை மேய்ப்பர்களுக்குத்தான் முதலில் அறிவிக்கப்பட்டது. (லூக்கா2:8-20)
- யோசேப்பும் மரியாளும் மேசியாவின் பெற்றோராக தெரிந்துகொள்ளப்பட்டார்கள். (லூக்கா1)
- எல்லோரும் இல்லையென்றாலும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருசிலர் எளிமையான பிண்ணனியை கொண்டவர்கள் (பேதுரு, அந்திரேயா, யாக்கோபு யோவான்) மீனவர்கள்.
3. “விசுவாசத்தில் ஐஸ்வரியவான்களாக”
அ) இது அப்படியே இயற்கையாக அல்ல,
ஆ) விசுவாசத்தில் ஐஸ்வரியவான்களாக மாற தரித்திருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
- ஏழ்மையான விசுவாசி தன்னுடைய விசுவாசத்தை வளர்க்க பிரயாசப்படவேண்டும்.
- அவனுக்கு விசுவாசத்திலாவது ஐஸ்வரியவானாக வாய்ப்பு வழங்கப்படுகிறது.
4. “இராஜ்ஜியத்தின் சுதந்திரர்களாக”
அ) தேவனுடைய சுதந்திரர்களாகும் பாக்கியம் தரித்திரருக்கு கொடுக்கப்படுகிறது,
ஆ) இந்த இடத்தில் இராஜ்ஜியத்தின் சுதந்திரர்களாக அழைக்கப்படுகிறார்கள்.
5. “அவரிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின”
அ) தேவனிடத்தில் அன்புகூறுகிறவர்கள் யாராயிருப்பினும்
ஆ) முழு இருதயத்தோடும் அன்பு கூறுகிறவர்கள்,
இ) வாக்குத்ததம் செய்யப்பட்டதை நிச்சயம் பெறுவார்கள்
