அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 15.09.2017.

யாக்கோபு தின தியானம்

“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசம் …”

வேதப்பகுதி: யாக்கோபு 2: 1

நடைமுறை விசுவாசத்தின் ஒரு பகுதி

யாக்கோபு அவரது எழுத்துக்களில் நடைமுறைக்கான அணுகுமுறையை பின்பற்றினார். அவர் எப்போதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் பயன்பட்டினை குறித்து நேர்மையாக மற்றும் தெளிவாக இருந்தார்.

பட்சபாதம் என்னும் பாவம்

பட்சபாதமாக செயல்படும் பாவத்தை குறித்து வெளிப்படையாக சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது.

என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப் பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக . “ யாக்கோபு 2: 1

1. “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசம்”

அ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதித்த விசுவாசம்.

ஆ) இது நான்கு சுவிசேஷங்களில் ஆழமாக கற்றுக்கொடுக்கப்பட்ட சத்தியத்தினை குறிக்கிறது.

2. யாக்கோபு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மிகுந்த மதிப்பை கொடுத்தார்.

அ) அவரை “மகிமையின் ஆண்டவர்” என்று சொல்லுகிறார்.

ஆ) இப்படி மதிப்பு கொடுக்கப்படும் ஒருவர் கற்பித்த விசுவாசமும் மிகுந்த கணமுள்ளதாக கருதப்படவேண்டும்.

3. “பட்சப்பாததோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக … “

அ) யாக்கோபு அவர்கள் பாகுபாட்டை வன்மையாக கண்டிக்கிறார்.

ஆ) பாரபட்சத்தின் விளைவு: –

a) சிலர் மாத்திரம் தவறான விதத்தில் சலுகை பெறுதல்.

b) சிலர் தவறான விதத்தில் அலட்சியம் செய்யப்படுதல்.

வெளிப்படுத்தப்படும் முக்கியமான பாடம்

யாக்கோபு இந்த பாவத்தை ஒரு உவமையைக் கொண்டு விளக்கபடுத்துகிறார். அவருடைய விளக்கம் பட்சபாதத்தின் அபாயத்தை விவரிக்க உதவுகிறது.

ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருமனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா? யாக்கோபு 2: 2-4

1. பணக்காரன்

முகதாட்சன்யம் காட்டப்படுகிறான்.

முக்கியத்துவம் பெறுகிறான்.

2. ஏழை

அவன் அலட்சியம் செய்யப்படுகிறான்.

அற்பமாக எண்ணப்படுகிறான்.

3. இப்படிப்பட்ட நிலை சபையில் முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது !

இத்தகைய பாரபட்சத்தை கடைப்பிடிக்கும் மக்கள் “தகாத சிந்தையுடன் நிதானிக்கிறவர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள்.

mm

Author: Stephen James

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *