அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 14.09.2017.

யாக்கோபு தின தியானம்

“மாசில்லாத சுத்தமான பக்தி…”

வேதப்பகுதி: யாக்கோபு 1:27

ஒரு செயலை சரியாக செய்வதற்கான வரையறை.

உண்மையான தேவபக்தியின் செயல் எப்படி இருக்க வேண்டும் என்பதை யாக்கோபு இங்கு விளக்குகிறார்.

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” யாக்கோபு 1:27

1. “மாசில்லாத சுத்தமான பக்தி”

அ) “சுத்தமான” என்பது “துய்மை” என்று பொருள்படும்.

ஆ) “மாசில்லாத” என்பது “கறை இல்லாமல்” என்று பொருள்.

இ) இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒன்றாக இணைத்து உண்மையான தேவபக்தியின் அர்த்தம் என்ன என்பதை யாக்கோபு கோடிட்டுக் காட்டுகிறார்.

2. ” பிதாவாகிய தேவனுக்கு முன்பாக”

அ) அதில் இங்கு இன்னொரு காரியம் முக்கியத்துவம் இருக்கிறது.

ஆ) “மாசில்லாத சுத்தமான பக்தியானது” பிதாவாகிய தேவனுடைய பார்வைக்கு முன்பாக இருக்கவேண்டும்.

இ) மனிதனின் அங்கிகாரம் இங்கு வலியுறுத்தப்படவில்லை; தேவனின் அங்கீகாரமே அவசியம்.

3. நடைமுறை மற்றும் தனிப்பட்ட பிரிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்

அ) பிரச்சனையில் உள்ளவர்களை விசாரிப்பது

a) திக்கற்றவர்கள்

b) விதவைகள்

c) ஆபத்தில் தவிர்க்க முடியாத உதவி தேவைப்படுவோர்.

d) உண்மையான தேவையுள்ளவர்களை தேவபக்தியுள்ளவர் விசாரிப்பார்கள்.

ஆ) திக்கற்றவர்களும் விதவைகளும் இங்கு உதாரணங்களாக காட்டப்படுகின்றார்கள்.

உதவி தேவையுள்ளோர் என்பவர்கள் இந்த இரண்டு பிரிவுகளை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல.

4. “உலகத்தினால் கறைபடாபடி காத்துக்கொள்கிறதும்”

அ) “உலகம்” என்பது இங்கு உருவகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

a) இது தேவன் படைத்த பூமியை குறிக்கும் வார்த்தை அல்ல.

b) இது அநேக மக்களை தேவனிடமிருந்து பிரித்து விடும் துன்மார்க்க அமைப்பை குறிக்கும் பதம்.

ஆ) “கறைபடாதபடி”

a) உண்மையிலேயே தேவபக்தியானது தேவனைப் பிரியப்படுத்தும் ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழ விரும்புவது.

b) அப்படிப்பட்டவன் உலகத்தானாக இல்லாமல் அதிலிருந்து விலகி இருப்பான்.

c) அவன் தேவபக்தியற்ற உலக அமைப்பினால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்க மாட்டான்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *