அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 13.09.2017.

யாக்கோபு தின தியானம்

“உங்களுக்குள் யாராவது தன்னை தேவபக்தியுள்ளவன் என்று எண்ணினால்…”

வேதப்பகுதி: யாக்கோபு 1:26

தேவபக்தி என்பது

தேவபக்தியாக இருப்பது என்றால் என்ன? பின்வரும் காரியங்கள் பொதுவாக தேவபக்தியுடன் தொடர்புடையவையாக கருதப்படுகிறது.

அ) வழக்கமாக சபைக்குச் செல்லுதல்.

ஆ. சபை நிகழ்வுகள் / விழாக்கள் (கிறிஸ்துமஸ், பண்டிகைகளில் பங்கேற்பது).

இ. மார்க்கத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொண்டிருத்தல்.

ஒரு மாறுபட்ட பார்வை

மேலே குறிப்பிடப்பட்டவைகள் எல்லாம் மிகவும் பொதுவான முறையில் நிதானிக்கப்படுகிறது ஆனால் யாக்கோபு வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்தை இங்கு அளிக்கிறார்.

“உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.. “
யாக்கோபு 1:26

1. “உங்களிடையே உள்ள ஒருவன் தேவபக்தியுள்ளவன் என்று எண்ணினால்”

அ) தங்களை “தேவபக்தியுள்ளவர்கள்” என்று சிலர் நினைத்து கொண்டிருந்தனர்.

ஆ) எண்ணினால் என்ற வார்த்தை தேவபத்தியுள்ளவன் என்று “ யூகித்துக் கொள்கிறான்” என்று அர்த்தம் கொள்ளலாம்,

இ) அவனுடைய எண்ணத்தில் தன்னை தேவபக்தியுள்ளவன் என்று தானே உறுதிபடுத்திக்கொள்கின்றான்.

2. “தன்னுடைய நாவை அடக்காமல்”

அ) வெளிப்புற தோற்றத்தில், இந்த மனிதன் மத கடமைகளை நிறைவேற்றுகிறவனாக இருக்கலாம்.

ஆ) ஆண்டவராகிய இயேசுவின் நாட்களில் இருந்த பரிசேயரும் பல மத சடங்குகள் வைத்திருந்தார்கள்,

இ) தேவபக்தியுள்ளவன் என்று தன்னை அழைத்துக்கொண்டவர்கள் கீழ்கண்டவைகளை செய்யும்போது தங்கள் நாவை காத்துக்கொள்வதில்லை”

அவர்கள் மக்களை அவதூறு செய்கிறவர்களாக இருந்தனர்.

அவர்கள் புறம்கூறுகிறவர்களாக இருந்தனர்.

அவர்களது நாவு சபிப்பால் நிறைந்திருந்தது.

3. “தன் இருதயத்தை வஞ்சித்து”

அ) அவன் தனது சொந்த இதயத்தை அதிகமாக ஆராய்வதில்லை.

ஆ) அவன் கட்டுபாடில்லாமல் பேசும் தன் நாவை அடக்குவதில்லை .

இ) தன்னை தேவபக்தியுள்ளவன் என்று நினைத்துக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான்.

4. “இந்த தேவபக்தி வீணானது”

அ) இந்த வகையான “தேவபக்தியை” யாக்கோபு வீணானது என்று விவரிக்கிறார்.

அ) “வீணானது” என்ற வார்த்தை “பயனற்றது” என்று பொருள்படும்.

இ) “தேவபக்தி” என்று வார்த்தையில் சொல்லுவதை கேட்டு யாக்கோபு நம்பிவிடவில்லை.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *