அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 12.09.2017.

யாக்கோபு தின தியானம்

சுயாதீனப்பிரமாணம் …

வேதப்பகுதி: யாக்கோபு 1:25

தேவனுடைய ஆசீர்வாதங்கள்

யாக்கோபு அவரது எழுத்துக்களில் ஒருபோதும் எதிர்மறையாக எழுதுபவர் அல்ல. கேட்கிறவர்களாக மாத்திரம் இருப்பவர்களின் பலவீனங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அவர் கேட்கிறவர்களைவிட செய்பவர்களாக இருப்பவர்களை பாரட்டுகிறார்.

“சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.. “
யாக்கோபு 1:25,

1. “உற்று பார்க்கின்றவன்”

அ) தேவனுடைய வார்த்தை ஒருவன் தன்னை கண்ணாடியில் காண்பதற்கு ஒப்புமையாக கூறப்படுகிறது (யாக்கோபு 1:23).

ஆ) கண்ணாடியின் ஒப்புமை பொருத்தமாகத்தான் இருக்கின்றது (ஆனால் அது மட்டும்தான் என்று குறிப்பிட்டு கூறப்படவில்லை).

2. “சுயாதீனப்பிரமாணம்”

அ) தேவனுடைய வார்த்தை ஒரு கண்ணாடியை காட்டிலும் மேலானது.

ஆ) அது மிகச்சரியாக “பூரணப்பிரமாணம்” என்று அழைக்கப்படுகிறது சங்கீதம் 19:7-11.

இ) பூரணப்பிரமணத்தைப் பற்றி யாக்கோபு இன்னும் ஒரு காரியத்தை கவனிக்கிறார்:

இந்த பிரமாணம் ஒருவனை சுதந்திரமாக்கிறது.

இந்த சுதந்திரம் கர்த்தராகிய இயேசுவினால் வக்குத்தத்தம் செய்யப்பட்டது (யோவான் 8:32, 36).

விசுவாசிகளுக்கு கிறிஸ்துவில் இருக்கும் இந்த சுதந்திரத்தை பவுல் உறுதிப்படுத்துகிறார் (கலாத்தியர் 5: 1).

3. “அதை மறக்கிறவனாயிராமல் நிலைத்திருக்கிறவனே”

அ) மறுபடியும், கேட்பவர்களுக்கும், செய்கிறவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசத்தை பார்க்கின்றோம்.

ஆ) கேட்பவனாக மாத்திரம் இருப்பவன் மறந்து போய்விடுகிறார்.

இ) ஆனால் செய்கிறவன் மறக்கின்றவனாக இல்லாமல்,அவன் போதிக்கப்பட்ட வார்த்தைகளில் தொடர்ந்து நிலைத்திருக்கின்றான்.

4. “அதின்படி செய்கிறவன்”

அ) தேவனுடைய வார்த்தையைப் படித்து புரிந்துகொண்டபிறகு, செய்ய வேண்டிய வேலை இருக்கிறது என்பது அவனுக்கு தெரியும்.

ஆ) அவன் கவனத்தில் கொண்டு செய்யவேண்டிய வேலையை செய்ய நேரத்தை ஒதுக்குகிறான்.

5. “அவன் செய்கையில் பாக்கியவானயிருப்பான்”

அ) இது சங்கீதம் 1ஐ நினைவூட்டுகிறது.

ஆ) அவன் தேவனுடைய வார்த்தையை வாசித்து புரிந்துகொள்வதை நடைமுறைப்படுத்துகிறவனாய் இருக்கின்றான்.

இ) நீதியின் செயல்களைச் செய்கிறவனுடைய வேலையை தேவன் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார் (சங்கீதம் 112 ஐயும் காண்க).

ஈ) தேவனுடைய ஆசீர்வாதங்கள் அவருடைய அங்கீகாரத்தை வெளிப்படுத்துகின்றன.

உ) ஆனால் கேட்கிறவர்களாக மாத்திரம் இருப்பவர்களுக்கு இந்த ஆசீர்வாதம் வாக்குத்தத்தம் செய்யப்படுவதில்லை.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *