அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 11.09.2017.

யாக்கோபு தின தியானம்

“வார்த்தையைக் கேட்கிறவனாக இருப்பவன்..”

வேதப்பகுதி: யாக்கோபு 1:23

சுட்டிக்காட்டப்படும் பிரச்சனைகள்

அப்போஸ்தலர்களில் அநேகரைப் போலவே,யாக்கோபும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பேசினார். இது மிகவும் நல்லது மற்றும் அவசியமானது.

என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்: அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன்சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.
யாக்கோபு 1: 23-24

1. வார்த்தையை கேட்டும் செயல்படுத்தாதவன்

அ) வித்தியசம் மிகத்தெளிவாக தெரிகிறது.

ஆ) கேட்கிறவர்களுக்கும் செய்கிறவர்களுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது.

2. தேவனுடைய வார்த்தை

அ) வேதம் ஒரு கண்ணாடியுடன் ஒப்பிடப்படுகிறது.

ஆ) கண்ணாடியின் முக்கிய செயல்பாடு: அதைப் பார்க்கும் நபரை அப்படியே பிரதிபலித்து காண்பிக்கும்.

இ) எப்பொழுதும் இரண்டு காரியங்களை பிரதிபலிக்கும்

ஒரு நபருடைய சரியான அம்சங்கள்.

ஒரு நபருடைய சரியில்லாத அம்சங்கள்.

3. கேட்கிறவனாக மாத்திரம் இருப்பவன்.

அ) அவன் தனது இயல்பான முகத்தை பார்க்கின்றான்.

அதில் அவனுடைய நல்ல விஷயங்களை அவர் கவனிக்கின்றான்.

அவனுடைய சரியில்லாத விஷயங்களையும் கவனிக்கின்றான்.

ஆ) ஆனால் அவன் அதை பற்றி அக்கரையில்லாமல் போய்விடுகிறான்.

இயற்கையாகவே ஒருவன் தன்னை கண்ணாடியில் பார்க்க நாள் முழுவதையும் செலவிடுவதில்லை.

அவன் சரியில்லாத காரியங்களை அடையாளம் காணுபவனாக இருக்க வேண்டும்.

இ) அவன் என்ன தன்மையுடையவன் என்பதை உடனடியாக மறந்து விடுகிறான்.

தான் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாகவே
அறிகின்றவனாக இருக்கின்றான்.

ஆனால் அதை குறித்து மிகப்பெரிய அக்கரையில்லாதவனாக இருக்கின்றான்.

பிரச்சனையை சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.

ஆனால் அவன் அவ்வாறு செய்வதில்லை.

தனது வாழ்க்கையில் சரிசெய்யப்பட வேண்டிய பிரச்சினைகளை எளிதாக மறந்துவிடுகிறான்.

கேட்கிறவனாக மட்டும் இருப்பவன் மாறாதவனாகவே இருக்கிறான், ஏனென்றால் அவன் தேவனுடைய வார்த்தையை செயல்படுத்துவதில்லை.

mm

Author: Stephen James

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *