அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 10.09.2017.

யாக்கோபு தின தியானம்

“தேவனுடைய வார்த்தை – ஒரு பார்வை …”

வேதப்பகுதி: யாக்கோபு 1:22

தேவன் நமக்கு கொடுத்த பரிசுத்த வேதத்திற்காக அவருக்கு நன்றி சொல்வோம். வேதத்தில் வெவ்வேறு ஆசிரியர்கள் இதன் மகிமையை குறித்து பல்வேறு விதமாக விவரித்திருக்கின்றார்கள். பின்வரும் ஒருசிலப் பகுதிகள் அவைகளில் குறிப்பிடத்தக்கவை: –

அ. சங்கீதம் 12

1. “கர்த்தருடைய வசனங்கள் சுத்தமானவைகள்” (சங்கீதம் 12: 6)

2. அவைகள் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கு ஒப்பாயிருக்கிறது.

ஆ. சங்கீதம் 19

1. “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது.” (சங்கீதம் 19: 7 அ)

2. “கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” (சங்கீதம் 19: 7 ஆ)

3. “கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது.” (சங்கீதம் 19: 8 அ)

4. “கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.” (சங்கீதம் 19: 8 ஆ)

5. “கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது” (சங்கீதம் 19: 9 ஆ).

இ. சங்கீதம் 119

1. “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119: 105)

2. “உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.”(சங்கீதம் 119:142 ஆ)

ஒரு முக்கிய போதனை

யாக்கோபு, மற்ற எல்லா அப்போஸ்தலர்களையும் போல, தேவனுடைய வார்த்தையின் மகிமையான தன்மையை அறிந்திருந்தார். தேவனுடைய வார்த்தையில் வல்லமை இருக்கிறது. ஆனால் தேவனுடைய வார்த்தையைப் பற்றிய அறிவு மட்டும் போதாது. அது சாந்தத்தோடு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அது கட்டாயம் இதயத்தில் நிலைக்கவேண்டும்.

இந்த போதனையோடு சேர்க்க அவரிடத்தில் இன்னும் ஒரு வார்த்தை இருந்தது. அது நடைமுறைக்கான பகுதியாக இருந்தது.

” நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். “
யாக்கோபு 1:22

1. “அதின்படி செய்கிறவர்களாயுமிருங்கள்,

அ) கர்த்தராகிய இயேசுவின் வார்த்தையை கேட்டவர்கள் அனேகர் இருந்தார்கள்.

ஆ) ஆனால் ஒருசிலரே அவரை சீஷர்களாக பின்பற்றினர்.

இ) இங்கே யாக்கோபின் அழைப்பு தெளிவாக உள்ளது:

தேவனுடைய வார்த்தை நம் வாழ்க்கையில் செயல்படுத்தப்பட
வேண்டும்.

தேவனுடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படியாமல் நம்முடைய  அறிவால் மட்டுமே எந்த விளைவும் ஏற்பட்டுவிடாது.

2. ” நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல “

அ) வெறுமனே கேட்பதற்கும் மற்றும் செய்வதற்கும் இடையே உள்ள வேறுபாடு திறம்பட்ட காட்டவே இங்கு சொல்லப்படுகின்றது.

ஆ) கேட்டும் செயலில் காட்டமுடியாதவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான்.

 

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *