அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 23.08.2017

யாக்கோபு தின தியானம்

வேதப்பகுதி: யாக்கோபு புத்தகம்.

ஆசிரியர் அறிமுகம்.

யாக்கோபு அவர்கள் தன்னை இந்த புத்தகத்தின் ஆசிரியராக அறிமுகப்படுத்துகின்றார். முதல் தலைமுறை விசுவாசிகள் இவர் யார் என்று அடையாளம் காண்பதில் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் நமக்கு இந்த புத்தகத்தின் ஆசிரியர் யார் என்பதை குறித்து குழப்பம் ஏற்படலாம். ஏனெனில்…

” யாக்கோபு ” என்ற பெயரை கொண்டவர்கள் வேதாகமத்தில் அனேகர் இருக்கின்றார்கள். இருப்பினும் இரண்டு நபர்களை நாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

A) யோவானின் சகோதரனாகிய யாக்கோபு (மத்தேயு 4:21)

1. இவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முதன்மை சீடர்களில் ஒருவர்.

2. தன் சகோதரனாகிய யோவானோடு சேர்ந்து கர்த்தரைப் பின்பற்றும்படி அழைக்கப்பட்டவர்.

3. இவர் அப்போஸ்தலர்களின் முதல் பட்டியலில் குறிப்பிடப்பட்டவராயிருக்கின்றார். (மத் 10:2),

4. இந்த யாக்கோபு தான் ஏரோது அகிரிப்பாவால் கொல்லப்பட்டார் (பிரதான ஏரோதுவின் பேரன்). அப். 12: 2

5. ஏனவே இவர் இந்த புத்தகத்தின் ஆசிரியராக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

B) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சகோதரனாகிய யாக்கோபு

1. இயேசுவின் உடன்பிறப்புகளில் ஒருவராக வேதம் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது (மத்தேயு 13:55; மாற்கு 6: 3).

2. ஆரம்பத்தில் இயேசுவை நம்பாத அவருடைய சகோதரர்களில் யாக்கோபும் ஒருவர் (யோவான் 7: 5).

3. ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவருக்கு தனிபட்ட விதத்தில் ஒரு சிறப்பு தரிசனத்தை காண்பித்தார்.
(1 கொரிந்தியர் 15: 7).

4. முதல் சபையின் சிறந்த தலைவராக உருவானார், (அப்போஸ்தலர் 15:13).

5. அவர் எருசலேமில் கூடிவந்த சபையில் இருந்து ஊழியம் செய்தார். (அப்போஸ்தலர் 15: 13-21).

6. பல வரலாற்று அறிஞர்கள் இவர்தான் இந்த நிருபத்தின் ஆசிரியராக இருக்ககூடும் என்று கருதுகிறார்கள்.

தேவன்மீது வைக்கும் விசுவாசம் என்பது “இறையியல்” கோட்ப்பாட்டின் அடிப்படையில் மட்டும் இல்லை. விசுவாசம் என்பது நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தப்பட வேண்டும்.


C. யாக்கோபு நிருபத்தின் சிறப்பியல்புகள்:

1. யாக்கோபு நடைமுறை செயலுக்கான நிலைபாட்டை மையமாக வைத்து இந்த புத்தகத்தை எழுதினார்.

அ) தேவன்மீது வைக்கும் விசுவாசம் என்பது “இறையியல்” கோட்ப்பாட்டின் அடிப்படையில் மட்டும் இல்லை என்று உறுதியாக நம்பினார்.

ஆ) விசுவாசம் என்பது நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

2. யாக்கோபு புறஜாதி மக்களைவிட யூத மக்களுக்கான ஊழியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

அ) எனவே, இந்த புத்தகத்தில் வெளிப்படையாக யூதர்கள் பற்றிய குறிப்புக்கள் அதிகமாக இருக்கும்.

ஆ) இந்த நிருபத்தை முதலில் வாசித்தவர்களில் முக்கியமானவர்கள் யூத கிறிஸ்தவர்களாக இருந்திருக்கும்.

நாம் வேதாகமத்தின் மற்ற பகுதியை வாசிப்பதைப் போலவே யாக்கோபு நிருபத்தையும் வாசிக்கவேண்டும்.
ஜெபத்தோடும், தியானத்தோடும் கவனமாய் வாசிப்போமானால், தேவஆவியானவர் நமக்கு தேவையான ஆழமான சத்தியங்களை கற்றுக்கொடுப்பார்.

mm

Author: Stephen James

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *