அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 09.09.2017.

யாக்கோபு தின தியானம்

“நம்மை அதி மோசமாக பாதிக்கும் காரியம்…”

வேதப்பகுதி: யாக்கோபு 1:21

நம்மை மோசமாக பாதிக்கும் காரியங்கள் பல உள்ளன. அவைகளில் முக்கியமான ஒன்று “கோபம்”. நம்மை பாதிக்கும் மற்ற காரியங்களையும் யாக்கோபு இங்கு விவரிக்க விரும்புகிறார்.

ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
யாக்கோபு 1:21

1. “ஆகையால்

அ) இது இரண்டு பதங்களை இணைக்கும் இணைப்புச் சொல்

ஆ) இது ஒரு வாதத்தின் இரண்டாம் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது

இ) முடிவான கருத்தை சொல்லுவதே இந்த வார்த்தையின் நோக்கம்.

2. “ஒழித்துவிட்டு

அ) அழுக்கு துணிகளை தூய்மை படுத்துவதை விவரிப்பதற்கு இந்த வார்த்தை அதிகமாய் பயன்படுத்தப்படுகிறது.

ஆ) அசுத்தமானதோ அல்லது அழுக்கானதோ அவை நீக்கப்படவேண்டும்,

3. ஒழித்து விட்டு விட வேண்டியவை

அ) கொடியவைகள்

இது ஒழுக்க ரீதியில் தீங்கு இழைக்கக்கூடியது என்பதை விளக்கப்படுத்தும் உவமையாக இங்கு சொல்லப்படுகிறது.

எந்தவொரு அசுத்தமும் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்

ஆ) அதிகபடியான துன்மார்க்கம்

துன்மார்க்கத்திற்கு விலகி இருக்க வேண்டும்

அதிகப்படியான அக்கிரமத்தை முற்றிலும் ஒதுக்கித் தள்ளவேண்டும்

4. “நாட்டப்படவேண்டிய வார்த்தை

அ) இது தேவனுடைய வார்த்தையை குறிக்கின்றது.

ஆ) நாட்டப்படவேண்டிய வார்த்தை என்று மிகச் சரியாக விவரிக்கப்படுகின்றது,

இ) தேவனுடைய வார்த்தையானது இருதயத்தில் ஊன்றப்பட வேண்டியதாக இருக்கின்றது.

5. சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.

அ) தேவனுடைய வார்த்தையானது நன்றாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

ஆ) அதை சாந்தத்தோடு ஏற்றுக்கொள்வதே சரியான முறை.

இ) தேவனுடைய வார்த்தைக்கு தாழ்மையோடு கீழ்படிய வேண்டும்,

6. நம்முடிடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ள

தேவனுடைய வார்த்தையில் உண்மையாகவே மிகுந்த வல்லமை இருக்கின்றது, ஆனால் அது தாழ்மையாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *