அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 08.09.2017.

யாக்கோபு தின தியானம்

யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாய்

வேதப்பகுதி: யாக்கோபு 1: 19

செயல்களின் விளைவுகள்

தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பவர்கள் செய்யும் எந்த செயல்களும் விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. இந்த வார்த்தையை யாக்கோபு இங்கு இணைப்பதற்க்கு சரியான நோக்கம் இருக்கின்றது

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
யாக்கோபு 1:19-20.

1. பொதுவான பிரச்சனைகள்.

அ) விசுவாசிகளிடத்தில் இருக்கும் பொதுவான பிரச்சனைகளை யாக்கோபு இங்கு கையாளுகின்றார்.

ஆ) அது என்ன பிரச்சனை என்று இங்கு வெளிப்படையாக சொல்லவில்லை ஆனால் அவர் கொடுத்த ஆலோசனையில் இருந்து நாம் இதை புரிந்துகொள்ள முடிகிறது.

2. விசுவாசிகள் வாழ்க்கையில் நடைமுறைபடுத்த வேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்.

அ) கேட்கிறதற்கு தீவிரமாய் இருக்கவேண்டும்,

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அடிக்கடி சொன்னதை நினைவில் கொள்ளுவோம்,
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் மத்தேயு 13:9.

அனேகர் தங்களுக்கு கேட்பதற்கு திராணி இருந்தும் கேட்பதில்லை.

ஆ) பேசுகிறதற்கு பொறுமையாய் இருக்கவேண்டும்,

அனேகர் கேட்பதை காட்டிலும் அதிகம் பேசுவதற்கு நினைக்கின்றார்கள்.

தவறான கருத்துக்களை கொடுப்பதை தவிர்த்துவிட்டு தீவிரமாய் கேட்க்கின்றவர்களாக இருக்கவேண்டும் என்று யாக்கோபு விசுவாசிகளுக்கு பரிந்துரை செய்கிறார்.

இ) கோபிக்கிறதற்கு தாமதமாயும் இருக்கவேண்டும்.

அநேகர் எளிதில் கோபமடைந்துவிடும் குணத்தோடு இருப்பதாக தெரிகிறது,

எரிச்சல் எளிதில் கட்டுப்படுத்தபடுவதில்லை, கோபம் இன்னும் மோசமானது.

கோபத்தினால் ஏற்படும் விளைவுகளை குறித்து கர்த்தர் எச்சரித்து இருப்பதை நினைவில் கொள்வோம். மத்தேயு 5: 21-22. கோபம் ஒரு மனிதனை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுவிடும்.

3. “மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டது

அ) மனிதனின் கோபம் எந்த நன்மையும் கொண்டு வராது.

ஆ) அது நீதியையும் நடப்பிக்கமுடியாது என்பது நிஜமானதே

யாக்கோபு உண்மையான நீதி எது என்று தெளிவுபடுத்துகின்றார்.

மெய்யான நீதி என்பது தேவனுடைய நீதி என்று விவரிக்கின்றார்,

மனிதனின் கோபம் நிச்சயமாக நீதியின் கனியைக் கொண்டு வராது.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *