அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 07.09.2017.

யாக்கோபு தின தியானம்

அவர் சித்தங்கொண்டு… நம்மை ஜெநிப்பித்தார்

வேதப்பகுதி: யாக்கோபு 1:18

கர்த்தருடைய நல்ல வரங்களினால் நாம் ஆசீர்வதிக்கப்படுவதோடு முதற்பலன் என்ற கருத்தையும் யாக்கோபு வலியுறுத்துகின்றார்.

அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார். யாக்கோபு 1:18

1. அவர் சித்தத்தினாலே

அ) இதில் தேவனுடைய சித்தம் சம்பந்தப்பட்டிருக்கின்றது,

ஆ) தேவனுடைய சித்தம் எப்பொழுதும் அவருடைய தெய்வீக ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது.

இ) இது வேறு காரணங்களால் பாதிக்கப்படுவதோ அல்லது தீர்மாணிக்கப்படுவதோ இல்லை,

ஈ) உண்மையிலேயே தேவனுடைய சித்தம் என்பது மிகவும் ஆழமான கருத்து.

2. அவர் நம்மை ஜெநிப்பித்தார்.

அ) மேலோட்டமாக பார்க்கும்போது இங்கு யாக்கோபு சிருஷ்டிப்பைப் பற்றி குறிப்பிடுவதுபோல தோன்றலாம்.

ஆ) ஆனால் ஆழமாக ஆராய்ந்தோமானால் அது நம்முடைய இரட்சிப்பை குறித்து சொல்லப்பட்ட குறிப்பு.

3. சத்திய வசனத்தினாலே

அ) நாம் சத்திய வசனத்தினால் மறுபடியும் பிறக்கின்றோம்,

ஆ) யாக்கோபு இதை சத்திய வசனம் என்று அழைக்கின்றார்,

அவருடைய வார்த்தையினால்தான் விசுவாசம் உருவாக்கப்படுகின்றது

நாம் தேவனுடைய வார்த்தையினால்தான் அவருடைய இரட்சிப்பின் திட்டத்தை புரிந்துகொள்கின்றோம்,

அவருடைய வார்த்தையினால் நாம் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டு கிறிஸ்து இயேசுவுக்குள் புதிய வாழ்வை பெறுகின்றோம்.

4. புதிதாக பிறந்த விசுவாசியை அவருடைய சிருஷ்டிப்பில் முதற்பலன் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

அ) தேவனே எல்லா ஜீவனையும் படைக்கின்றவர்.

அவருடைய படைப்புக்களை சிருஷ்டி என்று அழைக்கலாம்

இந்த சொல்லை வேறு அர்த்தத்தில் வாசித்துவிடக் கூடாது,

ஆ) மறுபடியும் பிறந்த ஒரு விசுவாசி முதற்பலன் என்றே அழைக்கப்படுகின்றார்,

தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு அற்புதமான வரங்களை கொடுக்கின்றார்,

அவைகள் தேவனுடைய கிரியைகளை பிரதிபலிக்கவே

நாம் அவருடைய பணியாட்கள்,

எல்லா விசுவாசிகளிடத்திலும் தேவன் என்ன செய்யமுடியும் என்பதை நாம் வெளிப்படுத்துகின்றோம்,

முதற்பலன் என்பது அறுவடை முழுவதும் எப்படி இருக்கும் என்பதை காட்டுவதாக இருக்கும்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *