அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 06.09.2017.

யாக்கோபு தின தியானம்

“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” 

வேதப்பகுதி: யாக்கோபு 1:17

தேவனுடைய வரங்களைக் குறித்து ரோமர் 12 மற்றும் 1 கொரிந்தியர் 12 ல் அப்போஸ்தலனாகிய பவுல் விரிவாக எழுதியிருக்கின்றார். ஆவிக்குரிய வரங்களை எவ்வாறு முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று விசுவாசிகள் புரிந்துகொள்ளுவதற்கு உதவிசெய்யும்படி பவுல் அவர்கள் எழுதினார்.

ஆனால் யாக்கோபு அவர்கள் சற்று மாறுபட்ட கேணத்தில் இதை கையாளுகின்றார். நாம் தேவனுடைய வரங்களை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதற்காக மட்டும் இதை சொல்லுகின்றார்.

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. யாக்கோபு 1:17.

1. வரங்கள் அங்கிகரிக்கப்பட்டு பாராட்டப்படவேண்டும்.

அ) அவைகள் தேவனிடத்தில் இருந்து வருபவை

ஆ) அவர் ஜோதிகளின் பிதா என்று உயர்வாக விவரிக்கப்படுகின்றார்.

2. நாம் எப்படி வரங்களை அங்கிகரித்து பாராட்டுவது

அ) அவைகளை நாம் நன்மையானவைகளாக அடையாளம் காணவேண்டும்

ஆ) மேலும் அவைகளை பூரணமானவைகளாக அடையாளம் காணவேண்டும்.

இ) கீழ்கண்டவைகளை செய்வதற்கு தேவனிடம் ஞானத்தை கேட்க வேண்டும்

வரங்களை கண்டறிய,

அவைகளை வளர்த்துக்கொள்ள

அவைகளை சிறப்பான முறையில் பயன்படுத்த…

3. தேவனை விலைமதிப்பில்லாத வரங்களை கொடுப்பவராக புரிந்துகொள்ளுதல்.

அ) அவர் பரலோகத்தில் இருக்கும் நம்முடைய பிதாவாக கொடுக்கின்றார்,

ஆ) அவர் ஜோதிகளின் பிதா என்று சிறப்பாக அழைக்கப்படுகிறார்,

அவரை முழுமையான வெளிச்சம் என்று விவரிக்கலாம்,

அவரிடத்தில் மாறுதல் இல்லை

அவரிடத்தில் வேற்றுமையின் நிழலுமில்லை

எனவே மோசம்போகாதிருங்கள்

வரங்களை தவறாக புரிந்துகொள்ளுவதற்கு வாய்ப்பு 

இதை சொல்லும்போது வரங்களை குறித்து தவறான கண்ணோட்டத்தை கொண்டிருந்த சீமோன் என்னும் மாயவித்தைக்காரனின் சம்பவம் நினைவில் வருகின்றது.

1. அப்போஸ்தலர்கள் பேதுரு மற்றும் யோவான் கைகளை வைக்கிறதினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டான்.

2. பேதுருவுக்கு பணம் கொடுத்து பரிசுத்த ஆவியின் வரத்தை கொடுக்கும் அதிகாரத்தை சம்பாதிக்க நினைத்தான்.

3. அப்போஸ்தலர் பேதுரு அவனிடத்திற்கு திரும்பி அவனை மிகவும் கடிந்துகொண்டான்.

பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. அப் 8:20.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *