அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 05.09.2017.

யாக்கோபு தின தியானம்

“மோசம்போகாதிருங்கள் …”

வேதப்பகுதி: யாக்கோபு 1:16

மோசம்போக்குதல்

அப்போஸ்தலனாகிய யாக்கோபு, தாம் எதற்கு எதிராக இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதை குறித்து தம்முடைய வழக்கமான பாணியில், வெளிப்படையான தெளிவை கொடுக்கும்படி நேரடியாக இந்த வார்த்தைகளை எழுதியிருக்கிறார்.

என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள் யாக்கோபு 1:16

1. விசுவாசிகள்( வாசகர்கள் )

அ) யாக்கோபு விசுவாசிகளை “பிரியமான சகோதரர்கள்” என்று அழைத்தார்.

ஆ) யாக்கோபு மற்றும் அவரது வாசகர்களுக்கு இடையே நெருங்கிய உறவு இருந்தது.

இ) அவர் வஞ்சிக்கபடுவதற்கேதுவான பிரச்சனை பற்றி அவர்களை எச்சரிக்கவே இதை எழுதுகிறார்.

2. மோசம்போகாதிருங்கள்

அ) வஞ்சிக்கப்படுவதற்கான ஆபத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது.

ஆ) அதற்காக எச்சரிக்கையான வார்த்தைகளை அவர் கொடுக்க வேண்டியிருந்தது.

இ) சகோதரர்கள் ஏமாற்றப்பட்டு போய்விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த தங்களுடைய பங்கை அவர்கள் செய்ய வேண்டும்.

வஞ்சிக்கபடும் பிரச்சனையை எதிர்கொள்ளுதல்

வஞ்சிக்கப்படகூடாது என்று தங்கள் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பல புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். அதில் குறிப்பிட்டு மூன்று முக்கியமானவர்களைச் சொல்லலாம்.

1. அப்போஸ்தலனாகிய பவுல்

அ) கள்ளப் போதனைகளை எதிர்த்து அவர் விரிவாக எழுதினார்.

ஆ) அவர் எழுதின கலாத்தியர், கொலோசெயர், 1 மற்றும் 2 தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகிய நிருபங்களில் இதை காணலாம் .

2. அப்போஸ்தலனாகிய பேதுரு

அ) தமது இரண்டாம் நிருத்தை கள்ளப் போதனைகளுக்கு எதிராகவே எழுதினார் .

ஆ) சுவிஷேசத்தை பாதுகாப்பது அப்போஸ்தல ஊழியத்தின் ஒரு பகுதியே.

3. அப்போஸ்தலனாகிய யோவான்

அ) “அன்பான அப்போஸ்தலனாக” அடையாளம் காணப்பட்டாலும் இவர், கள்ளப் போதகர்களுக்கு எதிராக கடுமையாக எழுதினார்.

ஆ) 1 யோவான் நிருபத்தை, விசுவாசிகள் வஞ்சகத்திற்கு எதிராக தங்களைக் காத்துக்கொள்ள எச்சரித்து எழுதினார்.

நம்முடைய தற்பொழுதைய காலத்தில்

வஞ்சிக்கப்படும் ஆபத்து தற்போதைய காலங்கள் வரைக்கும் தொடர்ந்து வந்துள்ளது. நம்மைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

நாம் கவனித்து செய்யவேண்டிய வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள் இருக்கின்றது.

1. நம்முடைய விசுவாசத்தையும், வேதவாக்கியங்களையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

2. ஞானத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ள கர்த்தருடைய கிருபையை நாட வேண்டும்.

3. பொய் போதனைகளிடமிருந்து நம்முடைய விசுவாசத்தைப் பாதுகாக்க தைரியம் வேண்டும்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *