அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 04.09.2017.

யாக்கோபு தின தியானம்

“அவனவன் தன்தன் சுய இச்சையினாலே”

வேதப்பகுதி: யாக்கோபு 1:14

சோதனையை பற்றி இன்னும் ஆழமான உண்மை.

யாக்கோபு சோதனையை குறித்த கருத்தை விவரிக்க மேலும் சில விளக்த்தையும் இங்கு எழுதுகிறார்.

அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான் பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்
யாக்கோபு 1: 14-15

1. சோதனைக்கான ஆதாரம்

அ) சோதனைக்கான ஆதாரமாக ஒருவருடைய சுயத்தையே இங்கு யாக்கோபு அடையாளம் காட்டுகிறார்.

ஆ) சோதனையின் ஆதாரமாக இருப்பது தனிப்பட்ட ஒருவரின் “சுய இச்சைகளே”

இ) இதயத்தின் தீய சிந்தைகளின் இயற்கையான விளைவுதான் இது.

2. கவனிக்க வேண்டிய மூன்று முக்கியமான வெவ்வேறு படிகள்:

அ) “இச்சை”

I) இது தனிப்பட்ட ஒருவருக்குள் உருவாகிறது.

Ii) இதற்கு தேவன் காரணம் அல்ல.

ஆ) “பாவம்”

I) ஒருவரின் இச்சைதான் பாவத்திற்கு வழிவகுக்கும்.

Ii) பாவம் என்ற விதை முளைத்து வெளிப்படுகிறது.

Iii) ஆனால் அது எப்பொழுது முழுமை அடைகின்றதோ அப்பொழுது அழிவை கொண்டுவரும்.

இ) “மரணம்”

I) அது ஆத்தும மரணத்திற்கும் வழிவகுக்கும்

Ii) அது சரீர மரணத்திற்கும் வழிவகுக்கும்.

முழு புரிந்துகொள்ளுதல்

இப்படிப்பட்ட சூழலில் ஒருவன் என்ன செய்ய வேண்டும் யாக்கோபு என்பதையே எழுதுகிறார்:

1. நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன்” என்று சொல்லக்கூடாது.

(உண்மையில் ஒருவனுடைய ஆசைகளே அவனை பாவம் செய்ய மயக்குகிறது.)

2. தேவன் யாரையும் சோதிக்கிறவர் அல்ல.

அ) தேவன் குழப்பத்தினை உருவாக்குபவர் இல்லை.

ஆ) அவர் பாவத்திற்கான காரணரும் இல்லை.

இ) அவர் பாவம் மற்றும் மரணத்திற்கு அழைத்துசெல்லும் காரியங்களுக்கு நிச்சயமாக துணையாக இருப்பதில்லை.

ஈ) நம்மை பாவத்திலிருந்து விடுவிப்பதற்காகவும், நித்தியமான மற்றும் பரிபூரணமான வாழ்வை நமக்கு அளிக்கவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்!

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *