
“சோதிக்கப்படுகிற எவனும்”
வேதப்பகுதி: யாக்கோபு 1:13
“சோதனைகள்”
யாக்கோபு சோதனையைக் குறித்து தான் எழுதியதை மறுபடியும் ஆய்வு செய்து ஞானத்தோடு மேலும் தொடர்ந்து எழுதுகிறார். அவரது முந்தைய ஆலோசனைகளில், விசுவாசிகள் சோதனைக்கு உட்படுத்தப்படும்போது அதை குறித்து தவறான எண்ணத்தோடு இருக்க வேண்டாம் என்று எழுதினார். இதை அவர் மிகவும் சரியாகவே எழுதியிருக்கின்றார்.
சோதனைக்கான மூல காரணம்
யாக்கோபு “சோதனைகான ஆதாரத்தினை” பற்றி ஆழமாக விளக்கி எழுதவில்லை. என்றாலும் பின்வரும் வசனத்தில், இந்த காரியத்தை சற்று விளக்க விரும்புகின்றார்.
சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. யாக்கோபு 1:13
1. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக
அ) யாக்கோபு இந்த கருத்தை சொல்லும்போது இந்த பிரச்சனையை குறித்து வெளிப்படையாகவே பேசுகிறார்.
ஆ) இந்த கருத்தின் பின்னணியில் இருக்ககூடியவைகளாக மனதில் கொள்ளவேண்டியவை :
சிலர் சோதனையின் மூல காரணமாக தேவன் இருப்பதாக சிலர் நினைக்கலாம்.
சிலர், முட்டாள்தனமான பெருமையினால்,தாங்கள் சோதிக்கப்படுவதற்குத் தேவனால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று நினைக்கலாம்.
இப்படிப்பட்ட சிந்தனையை வளர்த்துகொண்டதால், சிலர் தேவனைப் பற்றி தவறான கருத்துக்களை மனதில் கொண்டிருக்கலாம்.
இ) ஆனால் உண்மை இதுதான்:
நம்முடைய சோதனையின் பின்னால் தேவன் தான் இருக்கின்றார் என்று நாம் எண்ணிவிடக் கூடாது.
இப்படி அறிக்கை செய்வது தவறான மற்றும் கர்ப்பனையாக மட்டுமே இருக்கும்.
நம்மை சோதிக்கிற ஒருவனாக பிசாசு இருக்கின்றான் என்று வேதம் சொல்லுகின்றது. (கவனிக்க: யோபு, பேதுரு, பவுல்).
2. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல
அ) தேவனும் சோதிக்கப்பட முடியும் என்று சிலர் நினைக்கலாம்.
ஆ) தீயவைகளினால் தேவனும் சோதிக்கப்படலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.
இ) அவர் எந்த பரிசோதனைக்கும் மேற்பட்டவராக இருக்கின்றார்: இது தேவனுடைய இருக்கிற விதத்தின் இயல்பு.
3. “ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல”
அ) இந்த குறிப்பிட்ட சூழலில் மட்டுமே இந்த கருத்தை புரிந்துகொள்ளவேண்டும்.
ஆ) இல்லையென்றால் இந்த அறிக்கை பிற வேதாகம புத்தகங்களுக்கு முரண்பட்டதாக இருக்கும்.
தேவன் ஆபிரகாமை சோதித்தபோது (ஆதியாகமம் 22: 1).
தேவன் இஸ்ரவேலை சோதித்தபொழுது (யாத்திராகமம் 16: 4).
இ) தேவன் மக்களை சோதித்ததாக சில சிறப்பு நிகழ்வுகள் மட்டுமே உள்ளன.
ஈ) வேதம் ஒருபோதும் தனக்கு தானே முரண்பட்டது இல்லை:
யாக்கோபு தவறான சிந்தனைகளை சரி செய்யவே இதை இங்கு எழுதுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
