அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 02.09.2017

யாக்கோபு தின தியானம்

சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான் …”

வேதப்பகுதி: யாக்கோபு 1:12

ஜீவக் கிரீடம்

வாழ்க்கையில் சோதனைகளை எதிர்கொள்ளும் போது சகிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று யாக்கோபு தம்முடைய விசுவாசிகளை உற்சாகப்படுத்துகிறார்.

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்புகர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:12

1. ” யார் பாக்கியமுள்ள மனிதன்

அ) “பாக்கியவான்” என்ற வார்த்தை மலை பிரசங்கத்தில் கர்த்தராகிய இயேசுவினால் பயன்படுத்தப்பட்டது (மத்தேயு 5: 3-10).

ஆ) அது ஒரு நபரின் ஆசீர்வாத நிலையை விவரிக்கிறது.

பாக்கியவானிடம் தேவனுடைய ஆசீர்வாதம் இருக்கின்றது.

இது தனிப்பட்ட நபருக்கு கிடைக்கும் மரியாதையாக பார்க்கப்படுகிறது.

அந்த நபரின் விசுவாசத்திற்கான அங்கிகாரமாகவும் இருக்கின்றது.

2. “யார் சோதனையைச் சகிக்கின்றவன்?

அ) “சோதிக்கப்படுதல்” என்ற வார்த்தை “பரிட்சை” என்று அர்த்தம்கொள்ளலாம்.

ஆ) உண்மையான விசுவாசி சோதனையை சகித்துக்கொள்ளும் வல்லமையை பெற்றவராக இருக்கிறார்.

இ) சோதனை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது.

ஈ) ஒருவருடைய விசுவாசத்தின் உறுதியை சோதிக்கும் தேவையானக் கருவியாக பரிட்சை இருக்கின்றது.

3. “அவன் உத்தமனென்று விளங்கினபின்பு

அ) அவன் சோதிக்கபடும்போதும் கூட தேவனால் கண்காணிக்கபடுகின்றார்.

ஆ) நன்றாக சகிக்கும் ஒருவருக்கு தேவனுடைய அங்கிகாரம் காத்துக்கொண்டிருக்கின்றது.

இ) கர்த்தர் ஒருவரே இந்த அங்கிகாரத்தை கொடுப்பவர்.

4. “அவன் ஜீவ கிரீடத்தை பெறுவான்

அ) “கிரீடம்” என்பது ஜெயம் கொள்ளுகிறவனுக்கு கிடைக்கும் பரிசு.

ஆ) விசுவாசத்தில் வெற்றிபெரும் ஒருவர் கர்த்தரால் அங்கீகரிக்கப்படுகிறார்.

சி) நம்முடைய இதயத்த உற்சாகபடுத்தவே இந்த ஜீவக் கிரீடம் உவமை கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஈ) சோதனை சில நேரங்களில் மிகவும் கடினமாக இருக்கும், ஆகவே இந்த வார்த்தையானது நம்மை ஊக்கப்படுத்தவே கொடுக்கப்பட்டது.

5. “தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கின்றார்.

அ) ஜீவ கிரீடம் என்பது அவர் நமக்கு அளிக்கும் வாக்குத்தத்தம்.

ஆ) சோதனையை சகித்துக்கொள்ளுபவரே கர்த்தரை உண்மையாக நேசிக்கின்றவராக இருக்கின்றார்.

இ) சோதிக்கப்படும் ஆத்துமாவுக்கு கர்த்தரில் வைக்கும் அன்பு ஒன்றே உற்சாகத்தை தரும்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *