அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 01.09.2017.

யாக்கோபு தின தியானம்

“உயர்த்தப்பட்டதை குறித்து மேன்மைபாராட்டுதல்.”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 9

யாக்கோபு அவர்களின் எழுதுகின்ற விதம்

அப்போஸ்தலனாகிய யாக்கோபு ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்திற்கு விரைவாக கடந்து செல்கின்றார். அவரது இந்த அணுகுமுறை, ஒரு கருத்தை பற்றி விரிவாக ஆராய்ந்து விட்டு இன்னொரு கருத்தை பற்றி பேச விரும்புவதாக இருக்கின்றது.

முதல் கருப்பொருள் :

விசுவாசத்திற்கான சோதனை யாக்கோபு 1: 3-4,

இரண்டாவது கருப்பொருள்:

விசுவாசத்தோடு ஜெபித்தல் யாக்கோபு 1: 5-8

கர்த்தருக்குள்ளான வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்று பாராட்டுதல்

யாக்கோபு தம்முடைய விவாதத்திற்கான அடுத்து எடுத்துக்கொண்ட தலைப்பு, “வாழ்க்கை“.

முதல் நூற்றாண்டிலும்கூட ஒருவர் எவ்வளவு “செல்வத்தை உடையவர் மற்றும் “செல்வம் இல்லாதவர்” என்பவைகளுக்கு இடையே ஒரு தெளிவான வேறுபாடு இருந்தது.

தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன். ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான். யாக்கோபு 1: 9-10

1. “தாழ்ந்த சகோதரன்”

அ) வழக்கமாக உலகில் ஏழ்மையாக இருக்கும் ஒரு சகோதரனால் பெருமைபாராட்ட முடியாது.

ஆ) இருப்பினும், அவர் கர்த்தரிடம் வைக்கும் விசுவாசத்தின் காரணமாக “மேன்மையானவராக
இருக்கின்றார்”.

இ) கிறிஸ்துவின் மீது விசுவாசம் இருப்பதால், அவருடைய தகுதியில், அவரும் செல்வந்தனுக்கு சமமாகிறார்.

ஈ) இவ்விதமாக, தாழ்த்தப்பட்ட சகோதரர் கர்த்தருக்குள் உயர்ந்தவர் என்று “மகிமை” கொள்ளலாம்.

2. “ஐசுவரியவான்”

அ) செல்வந்தரும் கர்த்தரில் மகிமை கொள்ளலாம்.

ஆ) எனினும், அவருக்கு மகிமை என்பது அவர் கர்த்தருக்குள் விசுவாசம் வந்ததை குறித்து மட்டும்தான்.

இ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் ஐசுவரியவானின் விசுவாசம் பற்றிய விளக்கம் (மாற்கு 10:23).

ஈ) ஆகையால் ஐஸ்வரியவன் தான் “தாழ்த்தப்பட்டதை” (“தாழ்மை” என்பது சிறந்த வார்த்தை) குறித்து மேன்மைபாராட்ட வேண்டும்.

ஒரு மனித வாழ்க்கையின் அளவு

வாழ்க்கையின் கால அளவைப் பற்றி யாக்கோபு தனது கருத்தை இங்கு தெரிவிக்கின்றார். வாழ்க்கையில் செல்வம் மிகுந்தவர்களிடம் கால அளவுக்கான சவால் கடுமையாக உள்ளது.

சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான். யாக்கோபு 1: 10-11

1. ஐசுவரியவான் விரைவில் அழியக்கூடிய வயல்வெளியின் பூவிற்கு ஒப்பிடப்படுகின்றான்.

அ) சூரிய வெப்பம் அதிகமாகும்பொழுது புல் உலர்ந்து வாடிப்போகும்.

ஆ) அப்படிப்போலவே அவர்களின் உலக சம்பத்துக்களும் கூட மறைந்து விடும்.

2. எல்லாம் அழியக்கூடியது என்பதினால் கிறிஸ்து இயேசுவினால் நித்திய ஜீவனை அடைவதற்கான வாக்குத்தத்தை பெற்றிருப்பதால் மாத்திரம் மகிழ்ச்சி அடையலாம்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *