அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 31.08.2017.

யாக்கோபு தின தியானம்

இரு மனமுள்ளவன் …”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 8

ஒரு உறுதியான வார்த்தை

அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதும் விதத்தில் மிகவும் வெளிப்படையாக இருந்தார். மிகவும் எளிமையான வார்த்தைகள் மூலம் இந்த விவாதத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்தார்.

அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். யாக்கோபு 1: 7-8

1. ” அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக

அ) ஜெபிக்கின்றவர், தேவன் பதிலலிப்பாரா இல்லையா என்ற சந்தேகத்தோடு இருப்பது பாவம்.

ஆ) இத்தகைய ஜெபங்களைக் தேவன் அங்கிகரிப்பதில்லை என்று அவருடைய வலியுறுத்தலில் யாக்கோபு மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் இருக்கிறார்.

இ) சந்தேகப்படுபவன் தேவனிடமிருந்து எதையும் பெறமாட்டான்.

2. சந்தேகப்படுபவன் பற்றி ஒரு விளக்கம்

அ) “அவன் இரண்டு மனம் உடையவனாக இருக்கின்றான்.

ஒரு பக்கத்தில், தேவன் தம்முடைய ஜெபத்திற்கு பதிலளிக்கிறார் என்று விசுவாசிக்கின்றான்.

மறு பக்கத்தில், அவனுடைய ஜெபத்தை தேவன் கேட்டு அவனுக்கு பதில் கொடுப்பாரா என்று சந்தேகப்படுகிறான்.

ஆ) “அவனுடைய வழிகளில் நிலையற்றிருக்கின்றான்”

இது ஜெபிப்பவர்களிடம் இருக்கும் கண்டிக்க தக்க செயல்.

அவன் “உறுதியற்றவன்” என்று தெளிவாகிறது.

ஞானத்தை வாஞ்சிப்பதை பற்றி பேசும் இந்த சந்தர்ப்பத்தில்…

தேவன் நமக்கு ஞானத்தை கொடுப்பார் என்று எண்ணி ஜெபிக்க முடியுமா?

விசுவாசத்தோடு ஜெபிக்கின்றவர்களுக்கு தேவன் ஞானத்தை கொடுப்பாரா? என்று கேட்டால்,
“ஆம்!”என்பதே பதில்.

3. கர்த்தருடைய வார்த்தையினால் உற்சாகமடைதல்

அ) எபேசு சபைக்கு ஞானத்தை கொடுக்கும்படி பவுல் அவர்கள் ஜெபித்தார் (எபேசியர் 1: 17-18).

ஆ) இது பரிசுத்த ஆவியானவருடைய சிறப்பான வேலை என்று அவர் புரிந்து வைத்திருந்தார்.

இ) இந்த ஞானத்தை அவர்களுக்கு தரும்படி அவர் ஊக்கமாக ஜெபித்தார்.

4. நடைமுறையில் விசுவாசத்துடன் ஜெபிப்பது

அ)தேவனிடமிருந்து வரும் ஞானத்தை கேட்க தைரியம் வேண்டும்.

ஆ) ஞானத்தைத் தேடுவதற்கான உங்களுடைய பங்கை செய்யவேண்டும் (நீதிமொழிகள் 1-9).

இ) விசுவாசம் இருக்கிறதா இல்லையா என்று நீங்கள் ஜெபிக்கும்பொழுது உங்கள் இதயத்தையும் மனதையும் சோதித்துப் பார்க்க வேண்டும்.

ஈ) கர்த்தர் உங்களுக்கு ஞானத்தை எப்படி படிப்படியாக அளிக்கிறார் என்று பாருங்கள்.

உ) உங்கள் விசுவாச ஜெபத்திற்கு தேவனிடமிருந்து வரும் பதிலில் மகிழ்ச்சி அடையுங்கள்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *