
“பிரமாணத்தை மீறுகின்றவர்”
வேதப்பகுதி: யாக்கோபு 2:11
தேவனுடைய பிரமாணங்கள்
தேவனுடைய பிரமாணங்கள் பத்து கட்டளைகளில் அற்புதமாக சுருக்கப்பட்டுள்ளன. இந்த பிரமாணங்களை யாக்கோபு நன்கு அறிந்திருந்தார். அதில் அவர் இரண்டு பிரமாணங்களை உள்ளார்ந்த கருத்துக்களோடு மேற்கோள் காட்டி விளக்கியிருக்கின்றார்.
ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலைசெய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலைசெய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய். யாக்கோபு 2:11
1. “இதை சொல்லியிருப்பவர்”
அ) இது நியாயப்பிரமாணத்தை தந்தவரை குறிக்கிறது.
ஆ) மோசேயின் மூலமாக இஸ்ரவேலருக்கு பத்து கட்டளைகளை வழங்கிய தேவனாகிய கர்த்தர் இவரே.
2. இரண்டு கட்டளைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
அ) “விபசாரம் செய்யாதே”
ஆ) “கொலை செய்யாதே”
3. இவை மேற்கோள் காட்டப்பட்டதற்கான நோக்கம்.
அ) உதாரணமாக இருப்பதற்காக,
ஆ) மற்ற பிரமாணங்களும் மனதில் இருக்க வேண்டும் என்பதற்காகவும்.
4. ஒரு பிரமாணத்தை கடைபிடித்துவிட்டு, மற்றொன்றை மீறினால்
அ) அப்படி செய்கிறவர் “பிரமாணத்தை மீறுகிறவர்” என்றே வகைபடுத்தப்படு்கின்றார்.
ஆ) அந்த நபர் தேவனுடைய பிரமாணத்தை மீறின குற்றத்திற்கு உள்ளாவார்.
தேவனுடைய பிரமாணத்தை புரிந்துகொள்ளுதல்
யாக்கோபு தேவனுடைய பிரமாணங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறார். இது பிரமாணத்தை குறித்து எழும்பும் எந்த குழப்பத்தையும் தவறான விளக்கத்தையும் சரிசெய்யவே அவர் விரும்புவதை காட்டுகிறது.
1. தேவனுடைய பிரமாணங்கள்.
அ) அவைகள் மிகச் சரியாக கடைபிடிக்கப்பட வேண்டும்.
ஆ) ஒருவர் ஒரு பிரமாணத்தை கடைபிடித்து மற்றொன்றில் தவறுகிறவராக இருக்கும்பட்சத்தில் தன்னை தேவபக்தியுள்ளவன் என்று எண்ணிக்கொள்ள முடியாது.
2. இந்த பிரச்சனை கருத்தில் கொள்ளப்படும் சூழ்நிலை
அ) தனது நாவை கட்டுப்படுத்தாத ஒருவர்.
ஆ) பட்சபாதம் காண்பிக்கும் நபர்.
இ) மற்ற பிரமாணங்களை கைக்கொண்டாலும் இவர் பிரமாணத்தை மீறுகிறவர் என்றே அறியப்படுவார்.
ஈ) தேவனுடைய முழு பிரமாணத்திற்கு முன்பு தப்பிவிட முடியாது.
